“ஆன்சரிங் இஸ்லாம்” தளத்திற்கு பின்னால் யார் இருக்கிறார்கள்?
பலர் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி, நாங்கள் யார்? இஸ்லாம் பற்றி எழுத எங்களுக்கு என்ன தகுதி உள்ளது? எங்கள் விசுவாச அறிக்கை என்ன? போன்ற கேள்விகளை கேட்கிறார்கள்.
சிலர் எங்கள் இந்த தளத்தை நேசிப்பதாகவும், இதை மற்றவர்களுக்கு பரிந்துரைக்க விரும்புவதாகவும் கூறுகிறார்கள். ஆனால், நாங்கள் யார் என்பதையும், எங்கள் விசுவாச அறிக்கை என்ன என்பதையும் தெரிந்த பிறகு தான் மற்றவர்களுக்கு பரிந்துரைக்க முடியும் என்றும் சொல்கிறார்கள்.
இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் தேவை என்று சொல்பவர்களாக நீங்களும் இருப்பீர்களானால், நாங்கள் உங்களிடம் கேட்க விரும்புவது இது தான்: இந்த பதில்களால் உங்களுக்கு என்ன தேவை இருக்கிறது? எங்கள் தள கட்டுரைகளின் தரம் மட்டும் ஏன் உங்களுக்கு போதுமானதாக இல்லை?
எங்கள் தளத்தோடு பல புகழ்பெற்ற நபர்களின் பெயர்கள், நிறுவனங்கள் மற்றும் சபைகள் CHURCHS) போன்றவைகளை சம்மந்தப்படுத்திக் கொண்டால், நாங்கள் முன்வைக்கும் வாதங்களை மக்கள் நம்புவார்கள் என்ற ஆசை எங்களுக்கு இல்லை. பொதுவாக கிறிஸ்தவர்களிடமிருந்து எங்களுக்கு வரும் கேள்விகளுக்கும், அவர்கள் எங்களை நம்புவதற்கும், மற்றவர்களுக்கு பரிந்துரைப்பதற்கும் நாங்கள் சொல்லும் பதில் என்னவென்றால், நாங்கள் “இயேசுவின் நற்செய்தியை சொல்லும் கிறிஸ்தவர்கள் Evangelical Christians)” என்று தான்.
நாங்கள் இயேசுவின் நற்செய்தி ஊழியர்கள் என்று சொன்னதாலோ, அல்லது எங்கள் ஆசிரியர்களின் பெயர்களில் பெரிய பெரிய பட்டங்கள் இருப்பதாலோ நாங்கள் எந்த ஒரு கிறிஸ்தவரையும்
அல்லது மற்ற யாவரையும்) நாங்கள் சொல்வதை அவர்கள் அப்படியே நம்பவேண்டும் என்று விரும்புவதில்லை, அதற்கு பதிலாக, எங்கள் பதில்கள் பைபிளுக்கு முரண்படாததாயும், சரியான ஆதாரங்களை கொண்டு இருப்பதாலும், மற்றும் எங்கள் பதில்களில் பகுத்தறிவு வாதங்கள் இருப்பதாலும் மட்டுமே நம்பச்சொல்கிறோம்.வசனங்களை ஆராயும் இந்த விசுவாசிகளை பைபிள் புகழ்கிறது:
அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.
அப் 17:11)
இந்த பெரோயா பட்டணத்தின் மக்கள், இயேசுவின் சுவிசேஷத்தை பவுல் சொன்னதாலோ அல்லது பவுலுக்கு எருசலேம் அப்போஸ்தலர்களின் ஆதரவு இருக்கிறது என்று எண்ணியதாலோ அவர்கள் விசுவாசிக்கவில்லை, அதற்கு பதிலாக, அவர் சொன்னது ஆவிக்குரியதாகவும், உண்மையானதாகவும் இருக்கின்றதா என்று அவர்களாகவே ஆராய்ந்து பார்த்து நம்பினார்கள்.
எங்கள் தளத்தில் கட்டுரைகளை படிக்கும் வாசகர்கள் பெரோயா பட்டண மக்களைப் போல இருக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்கள் தள கட்டுரைகளின் தரத்தைப் பார்த்தும், மற்றும் இயேசுவின் நற்செய்தியில் உள்ள உண்மையை கண்டும், இஸ்லாமிய சகோதர சகோதரிகள் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்று விரும்புகிறோம். இதே போல கிறிஸ்தவ சகோதர சகோதரிகளும் தங்கள் கிறிஸ்தவ நம்பிக்கையைப் பற்றியும், இஸ்லாமைப் பற்றியும் அதிகம் அறிந்துக்கொள்ளவேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். ஏனென்றால், இது தான் உண்மை.
ஒரு வருத்தமான செய்தி என்னவென்றால், இயேசுவின் நற்செய்தி ஊழியம் செய்யும் கிறிஸ்தவர்கள், இஸ்லாம் பற்றி எழுதும் அனைத்தும் உண்மையல்ல
அதே போல, பைபிள் பற்றியும், கிறிஸ்தவ நம்பிக்கையைப் பற்றியும் இவர்கள் எழுதுவது எல்லாம் உண்மையாக இருப்பதில்லை). நாங்கள் அவர்களின் கிறிஸ்தவ நம்பிக்கையை சந்தேகப்படவில்லை, அதற்கு பதிலாக இஸ்லாம் பற்றி அவர்கள் எழுதும் எல்லாவற்றையும் நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் இயேசுவின் நற்செய்தி ஊழியம் செய்கிறார்கள் என்ற காரணத்திற்காக அவர்கள் எழுதுவதை நம்பும்படி நாங்கள் பரிந்துரைப்பதில்லை. அதே போல, நாங்களும் அவர்களைப் போல கிறிஸ்தவ ஊழியம் செய்கிறவர்கள் என்பதாலேயே எங்களை நம்பும்படி சொல்வதில்லை.இப்போது நாம் பார்த்த இதே நிலை, எங்கள் பட்டப்படிப்பிற்கும், எங்கள் தகுதிக்கும் பொருந்தும். எங்கள் தளத்தில் கட்டுரை எழுதும் ஆசிரியர்களில் சிலர், வேத பண்டிதர்களாக இருக்கிறார்கள், மதகோட்பாட்டை பற்றி படித்தவர்களாக இருக்கிறார்கள், அவ்வளவு ஏன், இஸ்லாமிய பட்டப்படிப்பை பல்கலைக்கழகங்களில் படித்தவர்களாகவும் இருக்கிறார்கள். அதே நேரத்தில், சொந்தமாக கற்றுக்கொள்கிறவர்களும் உண்டு, இவர்களுக்கு இன்னும் அதிக அறிவு இருப்பதை நாம் காணமுடியும். எங்கள் எழுத்துக்களில் உள்ள தரத்தைப் சோதித்துப் பார்க்கும் படி உங்களை கேட்டுக்கொள்கிறோம், மற்றும் எங்களுக்கு தகுதி உள்ளது நாங்கள் சொல்வது தான் சரியானது என்றுச் சொல்கிறவர்களின் கூற்றை நம்பி ஏமாறவேண்டாம் என்றும் உங்களை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வளவு தான் நாங்கள் எங்களைப்பற்றி சொல்லவிரும்புவது, மற்றும் நாங்கள் ஒரு கிறிஸ்தவ நற்செய்தி ஊழியம் செய்கிறவர்கள் என்பதால்,இந்த தொடுப்புக்களில் கொடுக்கப்பட்ட World Evangelical Alliance, Lausanne Committee for World Evangelization, விசுவாச அறிக்கையை எந்த நிபந்தனையும் இன்றி அறிக்கையிடுகிறோம்.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, நீங்கள் அவரையும் அவரது உண்மையையும் கண்டடையும் படி உங்களுக்கு உதவி புரிவாராக.
இப்படிக்கு,
உங்கள் ஆன்சரிங் இஸ்லாம் குழு
இந்த தலைப்புப் பற்றி தொடர்புடைய இதர விவரங்கள்:
- ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் ஏன் சில புத்தகங்கள், மற்றும் கட்டுரைகள் ஆசிரியரின் பெயர் இல்லாமல் இதற்காக காரணங்கள் என்ன? புனைப் பெயரில்) எழுதப்படுகின்றன.
- உங்கள் தளத்தின் பெயர் Answering Islam) ஏமாற்றுவதாக உள்ளதே!
- நாங்கள் யார் என்பதைப் பற்றி சில இஸ்லாமியர்களின் கருத்துக்கள்.
முகப்பு பக்கம்: ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்