முஸ்லீம்களின் யார்-எப்போது-எங்கே-எப்படி-என்ன-ஏன் என்ற பல பிரச்சனைகள்
The Muslim who-when-where-how-what-why-multi-problem
பைபிள் திருத்தப்பட்டது என்று பல இஸ்லாமியர்கள் கூறுவார்கள்
மனிதர்கள் மூலமாக நிஜ வாழ்க்கையில் நடக்கும் எந்த நிகழ்ச்சியானாலும் சரி, அந்நிகழ்ச்சிகளுக்கு தனிப்பட்ட வித்தியாசமான இயல்புகள் இருக்கும். இப்படிப்பட்ட் செயல்கள், ஒருவரால் அல்லது குறிப்பிட்ட பலரால், ஒரு குறிப்பிட்ட சமயத்தில் அல்லது பல சமயங்களில், ஒரு குறிப்பிட்ட விதத்தில், குறிப்பிட்ட இடங்களில் மற்றும் சில காரணங்களுக்காக செய்யப்படும். இதை எல்லாரும் அங்கீகரிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
எனவே, பைபிள் திருத்தப்பட்டது என்று சொல்லும் நீங்கள், உங்கள் வாதம் உண்மையானது என்பதை நிருபிக்க, கீழ் கண்ட கேள்விகளுக்கு நீங்கள் பதில் தரவேண்டியுள்ளது.
- இந்த திருத்தல் வேலை எப்போது நடந்தது? [முகமதுவிற்கு முன்பா அல்லது பின்பா]?
- யார் இந்த திருத்தல் வேலையை செய்தார்கள்?
- எந்த இடத்தில் இது நடந்தது? [நகரம், நாடு,....?]
- எந்த வசனங்கள் திருத்தப்பட்டது?
- எப்படி இதை செய்தார்கள் [அதாவது, இதைப்பற்றி கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு, எப்படி இதை செய்யமுடிந்தது]?
- ஏன் இந்த கடினமான நம்பமுடியாத வேலையை செய்வார்கள்?
எந்த முஸ்லீமாலும் இதற்கு பதில் தரமுடியாது. ஏன் என்று நான் ஆச்சரியப்படுகிறேன்? ஏனென்றால், இப்படி ஒரு காரியம் செய்யவேண்டுமானால், அதற்கு உலக மகா அற்புதம் செய்யக்கூடிய சக்தியை விட அதிக வலிமை தேவைப்படும். இப்போது கிடைத்துள்ள அதிகபடியான பிரதிகளின் ஆதாரங்களுக்கு எதிராக யாராவது திருத்தவேண்டும் என்று எண்ணம் கொள்ளவேண்டுமானால், அதற்கு அதிக நம்பிக்கை அதுவும் கண்மூடித்தனமான நம்பிக்கை வேண்டும்.
பைபிள் பற்றிய இதர கட்டுரைகள்
முகப்புப் பக்கம்: ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்