சொர்க்கத்தின் வழிகாட்டி

Signposts to Paradise

ரோலண்ட் கி்ளார்க்

பைபிளைப் போலவே, குர்‍ஆனும், மஸீஹாவின் அற்புதப் பிறப்பு எனபது "இறைவனிடமிருந்து வந்த அடையாளம்" என்றுச் சொல்கிறது. அல்லா கொடுக்கும் அடையாளம் பற்றி குர்‍ஆன் மிகவும் மெச்சிக் கொள்கிறது, இவ்வார்த்தைகள் நம்மை ஆழமாக சிந்திக்கத்தூண்டுகிறது, அல்லாவின் அடையாளத்தை புரிந்துக்கொள்பவர்களைப் பற்றி குர்‍ஆன் இவ்விதமாக கூறுகிறது, "...சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு, ... நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு, ... செவியுறும் சமூகத்திற்கு ...நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு." (சூரா 30:21-24). இன்னும் தேவதூதன் இயேசுவின் பிறப்புப் பற்றி சொன்ன செய்திக்கு இயேசுவின் தாய் எப்படி கீழ்படிந்தார்கள் என்பதை படிக்கும் போது மிகவும் உற்சாகமாக இருக்கிறது, "மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்" (லூக்கா 2:19).

உலகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இயேசுவின் தாயாகிய மரியாள், "உலக பெண்களில் சிறந்தவர்" என்று மதிக்கிறார்கள். கற்பைக் காத்துக் கொள்வதில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக மரியாள் விளங்குகிறார். மரியாளின் எடுத்துக்காட்டு நமக்கு இன்னொரு விதத்திலும் உற்சாகத்தைத் தருகிறது, அதாவது, அற்புத பிறப்பு பற்றி மரியாளின் செயலை நாம் மேலே படித்தோம். உண்மையாகவே, அற்புத‌பிறப்பு பற்றிய அவரது சிந்தனைகள், இறைவன் மீது அவர் கொண்டிருந்த அன்பையும், பக்தியையும் அது வெளிப்படுத்துகிறது.

மரியாளின் சிறப்புமிக்க மகனின் பிறப்பு உலக முக்கியத்துவம் வாய்ந்தது என்று குர்‍ஆன் சொல்கிறது. இந்த அற்புத பிறப்பு, "அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம் (a Sign for all People)" (சூரா 21:91) என்றுச் சொல்கிறது குர்‍ஆன். உண்மையாகவே, தீர்க்கதரிசிகள் இயேசுவின் உலகமயமான ஊழியத்தை/இரட்சிப்பைப் பற்றி கூறினார்கள். இயேசு குழந்தையாக இருக்கும் போது அவரை விருத்தசேதனம் செய்வதற்கு ஆலயத்திற்கு கொண்டு வந்தபோது, சிமியோன் கூறியதை நாம் படிக்கிறோம், "அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து: ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்" (லூக்கா 2:28-32). இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள், முந்தைய தீர்க்கதரிசிகள் சொன்னதை உறுதிப்படுத்துகின்றன, அதாவது, மேசியா என்பவர் மூலமாகத் தான் தேவன் இரட்சிப்பைத் தருகிறார், "நீர் பூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, (bring salvation to the ends of the earth)" (ஏசாயா 49:6).

இயேசுவின் "பிறப்புச் செய்தியை" பற்றி பைபிள் மற்றும் குர்‍ஆன் சொல்லும் விவரங்களில் உள்ள ஒற்றுமை உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமானது. ஆனால், ஒரு விவரத்தை இன்னும் நாம் அலசவில்லை. மரியாள் தன் சிறப்புமிக்க‌ மகனுக்கு எவ்விதம் பெயரை தெரிந்தெடுத்தார் என்பதை கவனிப்போம் வாருங்கள்.

"இயேசுவின் பெயர்" தேவதூதன் மூலமாக அறிவிக்கப்பட்டது என்று பைபிளும் குர்‍ஆனும் சொல்கின்றன (மத்தேயு 1:21; சூரா 3:45). இறைவன் ஏன் "இயேசு/ஈஸா" என்ற பெயரை தெரிந்தெடுத்தார் என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா? இப்பெயர் ஏதோ தற்செயலாக அல்லது பெயர் வைக்கவேண்டுமே என்பதற்காக எந்த நோக்கமும் இல்லாமல் தெரிந்தெடுக்கப்பட்ட பெயர் அல்ல. இறைவனுக்கு எல்லாம் தெரியும் மற்றும் இப்பெயர் தெரிந்தெடுத்ததற்கு ஒரு நோக்கமும், காரணமும் இருக்கவேண்டும். அவர் மேசியாவின் குணாதிசயங்கள் மற்றும் அவர் செய்யப்போகும் இரட்சிப்பு நோக்கத்தை கருத்தில் கொண்டு இப்பெயரை அவர் வைத்துள்ளார். முஹம்மது எ சித்திக் என்ற இஸ்லாமிய அறிஞர் "இஸ்லாமிய குழந்தைகளுக்கான‌ பெயர்கள்" என்ற தன் புத்தகத்தில், இவ்விதமாக கூறுகிறார்: "பெயர் என்பது ஒரு மனிதனின் குணத்தையும், அவனது செயல்களையும் பிரதிபலிப்பதாக இருக்கிறது -The name is the real introduction of a man’s personality and the real representation of a man’s activities".

இயேசுவின் பெயரின் பொருள் என்ன என்று நாம் தெரிந்துக் கொள்ளவேண்டுமானால், நாம் கேட்கவேண்டிய ஒரு கேள்வி, "இயேசுவின் செயல்பாடுகள் எப்படி அவரது பெயரின் பொருளை பிரதிபலிக்கிறது?" என்பதைத் தான். இயேசு பிறப்பிற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தீர்க்கதரிசி "தேவனின் தாசனாகிய மேசியா என்ன செய்வார்?" என்பதை முன்னறிவித்தார், அதாவது மேசியா என்ப‌வ‌ர் "பூமியின் கடைசி பரியந்தமும் தேவனின் இரட்சிப்பை கொண்டு வருவார் (bring my salvation to the ends of the earth") (ஏசாயா 49:6) என்ப‌தாகும். ஆக‌, இயேசு என்ற‌ பெயரின் பொருள் "தேவ‌னின் இர‌ட்சிப்பு! (God’s Salvation!)" என்ப‌தை நாம் அறியும் போது ஆச்ச‌ரிய‌ப்ப‌ட‌வேண்டிய‌தில்லை. இந்த‌ பெய‌ரின் பொருளை, முஹ‌ம்ம‌த் ஐ. எ. உஸ்மான் என்ற‌ இஸ்லாமிய‌ ச‌ட்ட‌ நிபுன‌ர், "இஸ்லாமிய‌ பெய‌ர்க‌ள்" என்ற தன் புத்த‌க‌த்தில் அங்கீக‌ரிக்கிறார்.

ஏசாயா என்ற தீர்க்கதரிசி இந்த "இரட்சிப்பு" என்றால் என்ன என்பதை இன்னும் விவரமாக விவரிக்கிறார். ஜெருசலேமில் தேவன் "சகல ஜனங்கள்மேலுமுள்ள முக்காட்டையும், சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலையும், இந்த மலையிலே அகற்றிப்போடுவார். அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையைப் பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்." (ஏசாயா 25:7-9). பல ஆண்டுகளுக்கு பின்பு, ஒரு தேவதூதன், இயேசுவின் பிறப்புப் பற்றிய செய்தியை அதே போல் உள்ள வார்த்தைகளைக் கொண்டு அறிவிக்கிறார், "தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்" (லூக்கா 2:10-11).

மஸீஹாவின் வேலை மக்களை இரட்சிப்பது என்றால், அதனை அவர் எவ்விதம் செய்துமுடித்தார்? இயேசு அற்புதங்கள் செய்து, எப்படி மக்களை தங்கள் வியாதிகளிலிருந்து சுகமாக்கி காப்பாற்றினார் என்பதை பைபிளும் குர்‍ஆனும் விவரிக்கின்றன. ஒரு முக்கியமான விவரத்தை கவனிக்கவேண்டும், இயேசு வெறும் சிறிய குறைபாடுள்ள வியாதிகளை மட்டுமே சுகப்படுத்தவில்லை, அதோடு கூட, மிகவும் ஆபத்தான தீவிரமான வியாதிகளிலிருந்தும் விடுதலைக் கொடுத்தார் (மத்தேயு 11:5, சூரா 5:113). இயேசு இன்னும் ஆச்சரியமான அற்புதங்களையும் செய்தார். கல்லரையிலிருந்து மனிதர்களை உயிரோடு எழுப்பினார், இப்படிப்பட்டவர்களும் தேவனின் மஸீஹாவினால் இரட்சிக்கப்பட்டார்கள். இதோடு அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. பாவங்களினால் சீர்குளைந்து தங்கள் வாழ்க்கையை அழித்துக்கொண்டு வேதனையிலுள்ள மனிதர்களையும் அவர் இரட்சித்தார். ஏன் தேவன் "இயேசு" என்ற பெயரை தெரிந்தெடுத்தார் என்பதை காபிரியேல் தூதன், விளக்குகிறார் "அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்" (மத்தேயு 1:21).

லூக்கா 19ம் அதிகாரம் மேலே சொன்ன விவரங்களை தெளிவாக விளக்கும் அதிகாரமாகும். தீயவழியில் புகழ்பெற்ற சகேயு என்ற ஒரு மனிதனின் வாழ்க்கை, அவர் இயேசுவை சந்தித்த பிறகு, முழுவதுமாக மாற்றப்பட்டது. ஓ! அந்த நாள் எவ்வளவு மகிழ்ச்சியான நாள்! இந்த நிகழ்ச்சியின் கடையில், மஸீஹா தன் பெயருக்கு என்ன பொருள் என்பதையும், தன் வாழ்க்கையின் மூலமாக தேவன் கொண்டிருந்த நோக்கம் என்ன என்பதையும் தெளிவாக விளக்குகிறார் "இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே. இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்" (லூக்கா 19:9-10).

இந்த கட்டுரையை படிக்கும் ஒவ்வொரு வாசகரும், மஸீஹாவின் இரட்சிக்கும் சக்தியையும், அவரை அறிவதினால் கிடைக்கும் மகிழ்ச்சியையும் அடையவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதைப் பற்றிய மற்றுமொரு தமிழ் கட்டுரை உங்களுக்கு விருப்பமாக இருக்கும், படிக்கவும் "இருளை ஒளியாக்குதல்-Lighting Up the Darkness". இந்த கட்டுரை மஸீஹா கொடுக்கும் இரண்டு காரியங்களாகிய "ஒளியையும் இரட்சிப்பையும் கொடுப்பார்" என்பதைப் பற்றிய விவரங்களில் உள்ள தொடர்பு பற்றி விவரிக்கிறது.

சிந்திக்க ஒரு கேள்வி: இயேசு ஒரு கன்னியின் வயிற்றில் பிறந்தார் என்றுச் சொன்னால், ஏன் அவர் தன்னை "மனுஷ குமாரன்" என்று அழைத்துக்கொண்டார்? இந்த கேள்வி உங்களுக்கு விருப்பமானதாக இருக்கும் அல்லது இது போல இன்னும் அனேக கேள்விகள் உங்களுக்கு இருக்கலாம்.


ஆங்கில மூலம்: Signposts to Paradise


ரோலண்ட் கிளார்க் அவர்களின் கட்டுரைக‌ள்