பைபிளில் பெண்கள் பாகம் 2
சில எதிர்வாதங்களுக்கு பதில்கள்
சாம் ஷமான்
இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டு 1 : ஏவாளும் தேவனின் சாபமும்
பரிசுத்த வேதாகமத்தில் பெண்களின் நிலையைப் பற்றிய ஆராய்ச்சியை நாம் தொடர்வோம். தேவனுடைய வார்த்தையாகிய பைபிள் பெண்களை மட்டுப்படுத்துகிறது என்று நிருபிப்பதற்காக இஸ்லாமியர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டிற்கு பதிலை நாம் இக்கட்டுரையில் காண்போம். ஏன் அவர்கள் இப்படி குற்றம்சாட்டுகிறார்கள் என்றால், பைபிள் தேவனின் வார்த்தை இல்லை அல்லது பைபிளில் சொல்லப்பட்ட அனைத்தும் தேவனிடமிருந்து வரவில்லை என்பதை நிருபிப்பதற்குத் தான் அவர்கள் இப்படி கேள்வியை எழுப்புகிறார்கள். கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்து அனுமதித்தது போல, ஏதாவது புதுவகையான குற்றச்சாட்டு எழும்புமானால், அதனை நாம் நேர்த்தியாக பகுத்து, ஆராய்ந்து நம்முடைய பதிலை இக்கட்டுரையில் தருவோம். இப்போது நாம் எட்டு முக்கியமான குற்றச்சாட்டுகளை நம் பதிலுக்காக எடுத்துக் கொள்வோம். மற்றும் நாம் கொடுத்த முதல் மறுப்புப்போல இந்த பதிலும் பரிசுத்த வேதம் பெண்களை கவுரவப்படுத்துகிறது, மற்றும் அவர்களை கண்ணியப்படுத்துகிறது என்பதை ஆதாரத்தோடு நிருபிக்கிறது.
இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டு 1
ஆதியாகமம் 3ம் அதிகாரத்தின் அர்த்தத்தை முஸ்லீம்கள் திருத்தி, ஏவாள் தடுக்கப்பட்ட மரத்தின் கனியை புசித்து, அவள் தான் முழு உலகத்தையும் பாவத்தில் தள்ளினாள் மற்றும் ஆதாமையும் பாவம் செய்ய தூண்டினாள் என்ற பொருள் வரும் படி, முஸ்லீம்கள் பொருள் கூறுகிறார்கள். இதனால் தான் பெண் சபிக்கப்பட்டாள் மற்றும் பிரசவ நேரத்தில் வரும் வேதனைக்கும், கஷ்டத்திற்கும் இது தான் காரணம் என்று இவர்கள் திருத்தி பொருள் கூறுகிறார்கள். பிறகு இதே முஸ்லீம்கள் "பைபிளைப் போல மொத்த குற்றச்சாட்டை ஏவாள் மீது சுமத்தாமல், குர்ஆன் இந்த பாவத்திற்கு இருவரும் சமமாக பொறுப்பு வகிக்கிறார்கள் என்றுச் சொல்கிறது என்று" சொல்கிறார்கள். ஆனால், ஏவாள் அந்த மரத்தின் கனியை புசித்தாள் என்று குர்ஆன் சொல்வதுமில்லை அல்லது இவர்கள் சொல்லும் குற்றச்சாட்டையும் பைபிள் மீது சுமத்துவதுமில்லை.
முதல் முதலாக நாம் அறியவேண்டியது என்னவென்றால், "தேவன் சபித்ததால் தான் பெண்கள் கர்ப்பமாகிறார்கள், மற்றும் பிள்ளை பெறுகிறார்கள்" என்று பரிசுத்த பைபிள் சொல்வதில்லை. ஆனால், இதற்கு எதிர்மறையாக இருப்பது தான் உண்மையானது. அதாவது, பெண்கள் பிள்ளைகளை பெறுவதும் அதன் மூலம் மனித இனம் பெறுகவேண்டும் என்பது தான் ஆரம்பமுதலே தேவன் நியமித்த சட்டம் அல்லது நியதியாகும். இந்த நியதியை அவர் இவர்களின் வீழ்ச்சிக்கு முன்பே திட்டமிட்டுள்ளார்:
“பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி,
‘Be fruitful and multiply, and fill the earth and subdue it;) சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவ ஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். பின்னும் தேவன்: இதோ, பூமியின் மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக் கடவது; பூமியிலுள்ள சகல மிருக ஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று. அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற் காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று. ஆதியாகமம்.” 1:28-31
வேத வசனங்கள் சொல்கின்றன, அதாவது பிள்ளைகள் கர்த்தரால் கிடைத்த ஆசீர்வாதங்கள், இதனால் பெண்கள் இரட்சிப்பை பெறுவார்கள்.
“இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்; அவர்கள் நாணமடையாமல் ஒலிமுக வாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள்.” சங்கீதம் 127:3-5
“கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும். உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள். இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.” சங்கீதம் 128:1-4
“அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்.” 1 தீமோத்தேயு 2:15
இதுவரை நாம் பார்த்த விவரங்களின் படி பிள்ளைபேறு என்பது சாபத்தினால் வந்த ஒரு தண்டனை அல்ல என்பது தெளிவாகும். இதற்கு பதிலாக, அந்த சாபம் எப்படிப்பட்டது என்றால், ஏவாளின் இந்த பாவத்தினால், பெண்கள் பிள்ளைபெறுகின்ற நேரத்தில் கஷ்டப்படுவார்கள் என்பது தான் உண்மை. அதாவது கர்ப்பமாவது சாபமல்ல, பிள்ளைபெறுவது சாமபல்ல ஆனால், அந்த வலி மட்டும் தான் சாபத்தின் மூலம் வந்தது.
இரண்டாவதாக, ஆதியாகமம் 3ம் அதிகாராம் ஏவாளை மட்டுமல்ல, ஆதாமையும் குற்றப்படுத்துகிறது, அதனால் ஆதாமுக்கும் தண்டனை கொடுக்கப்பட்டது:
“பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய். நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.” ஆதியாகமம் 3:17-19
"To Adam he said, ‘Because you listened to your wife and ate from the tree about which I commanded you, "You must not eat of it," Cursed is the ground BECAUSE OF YOU; through painful toil you will eat of it all the days of your life. It will produce thorns and thistles for you, and you will eat the plants of the field. By the sweat of your brow you will eat your food until you return to the ground, since from it you were taken; for dust you are and to dust you will return.’" Genesis 3:17-19
மூல மொழியாகிய எபிரேய மொழியில் இந்த வசனங்கள் ஆதாம் மற்றும் ஏவாள் இருவரும் சரி சமமாக தங்கள் செயல்களுக்கு பொறுப்பு வகிக்கும் படி எழுதப்பட்டுள்ளது:
பிள்ளைப்பெறும் போது ஏற்படும் வலி, அதாவது ஏவாளுக்கு கொடுக்கப்பட்ட சாபம் என்றுச் சொல்லும் அந்த வலியானது, மூல மொழியிலும் அல்லது ஆரம்பகால யூத விவரங்களிலிருந்தும் சரியான முறையில் ஆராயப்படவில்லை. ஆதியாகமம் 3:16ஐ ஆதாரமாகக் கொண்டு அந்த வலியானது தவிர்க்க முடியாதது, அதை ஏவாளின் பாவத்திற்காக படைத்தவர் தண்டனையாக கொடுத்தார் என்றுச் சொல்கிறார்கள். எபிரேய மொழியில் உள்ள "etzev" என்ற வார்த்தைக்குத் தான் மொழிபெயர்ப்புகளில் “வலி” என்றும் “வேதனை” என்றும் மொழிபெயர்த்துள்ளார்கள். எபிரேய வார்த்தையாகிய "etzev" என்ற வார்த்தை ஆதியாகமம் 3:17ல் ஆதாமுக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த உண்மையைத் தான் பல மொழி பெயர்ப்பாளர்கள் கண்டுக் கொள்ளாமல் விட்டுவிட்டார்கள்! எபிரேய பைபிள் ஆங்கில மொழிபெயர்ப்பில் கீழ் கண்டவாறு இருக்கிறது:
"Unto the woman he said, I will greatly multiply thy sorrow etzev) and thy pregnancy: in pain etzev) thou shall bear children… And unto Adam he said,… cursed is the ground for thy sake; in toil etzev) shalt thou eat of it all the days of thy life." Hebrew Bible, 1965)
அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை etzev) மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே etzev) பிள்ளை பெறுவாய்; ……... பின்பு அவர் ஆதாமை நோக்கி: …… பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே etzev) அதின் பலனைப் புசிப்பாய். ஆதியாகமம் 3:16-17
இந்த வார்த்தை பெண்ணுக்கு
எபிரேய பைபிளின் கிரேக்க மொழிப்பெயர்ப்பை 70 வேத பண்டிதர்கள் ஒன்றாக சேர்ந்து இயேசுவிற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பாகவே கிரேக்க மொழியில் மொழிபெயர்த்தார்கள். இந்த பண்டிதர்கள், ஆதியாகமம் 3:16ல் வரும் “etzev” என்ற வார்த்தைக்கு, கிரேக்க வார்த்தையாக "lupe" என்ற வார்த்தையை பயன்படுத்தி மொழிபெயர்த்துள்ளார்கள். Lupe என்ற கிரேக்க வார்த்தையின் பொருள் "மனவெழுச்சி or உணர்ச்சிவேகம் – Emotion " என்பதாகும். “chul” , “yalad” என்ற எபிரேய வார்த்தைகளை கிரேக்க மொழியில் மொழிபெயர்க்க மூன்று வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர். இந்த மூன்று வார்த்தைகள் gennao, tikto மற்றும் odino என்பவைகளாகும். “Gennao” என்ற வார்த்தைக்கு பொருள் "பிள்ளையை பெற்று இருப்பதாகும்", இந்த வார்த்தை பெற்றோர் இருவருக்கும் பயன்படுத்துவர். Tikto என்ற வார்த்தைக்கு பொருள் "பிள்ளையை பெறுவது To Give Birth)" என்பதாகும். Odino என்ற வார்த்தைக்கு பொருள், குழந்தை பெறும் போது ஏற்படும் கஷ்டமாகும் Labor in Birth). இந்த மூன்று சாதாரண வார்த்தைகள் கிரேக்க புதிய ஏற்பாட்டில் காணப்படுகிறது. ஆனால் மறுபடியும், பிள்ளை பெறுவது என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான ஒரு அனுபவம் என்று பைபிள் கூறினாலும், மொழிபெயர்ப்பாளர்கள், பிள்ளை பெறும் போது ஏற்படும் வலியாக நினைத்துக்கொண்டே மொழி பெயர்க்கின்றனர். Source)
ஏவாள் தான் முதன் முதலாக பழத்தை சாப்பிட்டாள் என்றும், அல்லது ஆதாமை ஏவாள் தான் சாப்பிடும் படி ஏவினாள் என்றும் குர்ஆன் சொல்லாவிட்டாலும், இது குர்ஆன் சரியாகச் சொன்னது என்று அர்த்தமாகாது. உண்மையில், முஸ்லீம்கள் நினைப்பது போல "குர்ஆன் ஒரு முழுமையான வழிகாட்டி" என்பதற்கு எதிராக இது உள்ளது.
உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால், பைபிளைப் போல அல்லாமல் குர்ஆன் பல முக்கியமான விவரங்களைச் சொல்வதில்லை. அதனால் பல குளறுபடிகள் ஏற்படுகின்றன, புரியாமல் போகின்றன. அதாவது, யார் முதலாவது பழத்தை உண்டார்கள் என்ற மிக முக்கியமான விவரத்தை குர்ஆன் சொல்லவில்லை, அதனால் குழப்பம் நீடிக்கிறது. யார் முதலில் சாப்பிட்டார்கள் என்று சொல்லாமல் விட்டதோடு மட்டுமல்லாமல், ஏவாளின் பெயரையும் குர்ஆன் சொல்லவில்லை!
இப்படி குர்ஆன் சொல்லும் விவரங்களில் ஒரு தெளிவு இல்லாமல், விவரங்கள் முழுமை பெறாமல் இருப்பதினால், இஸ்லாமியர்கள் எந்த ஒரு விவரத்திற்கும் பைபிளை சார்ந்து இருக்கவேண்டிய நிலையில் உள்ளார்கள் அல்லது தள்ளப்படுகிறார்கள். அப்போது தான் அவர்களுக்கு குர்ஆன் சொல்லும் விவரங்களை புரிந்துக்கொள்ள முடிகிறது. குர்ஆன் என்பது தெளிவாக இல்லை என்றும் அது குழப்பம் தரக்கூடியதாக உள்ளது என்றும் முஸ்லீம்களும் உணர்ந்துள்ளார்கள். இப்படிப்பட்ட பிரச்சனை குர்ஆனில் உள்ளது என்று உணர்ந்து மற்றும் அதை வெளிப்படையாக ஒத்துக்கொண்டும் உள்ள நபர் முஹமத் எம். அய்யூப் Mahmoud M Ayoub) என்பவர் ஆவார். இவரது குர்ஆன் உரை 2:30-38 இவ்விதமாக கூறுகிறது.
முந்தைய சூராக்களில் சொல்லப்பட்ட ஆதாமின் கதை
30-38), மக்காவின் பிந்தைய காலத்திற்கு சம்மந்தப்பட்டவைகளாகும். ஆதாமை உண்டாக்கிய விவரங்கள், தேவதூதர்கள் அவருக்கு தலைவணங்கியது, ஆதாம் தோட்டத்தில் வாழ்ந்தது, மற்றும் அடுத்தபடியாக அவரை தோட்டத்தை விட்டு வெளியே அனுப்பிய விவரங்கள் அனைத்தும் சிறிது விவரமாக சொல்லப்பட்டுள்ளது. ஏற்கனவே நன்றாக தெரிந்த கதைக்கு இந்த வசனங்கள் உரையாக உள்ளன, ஏனென்றால், அவைகள் புதிய பிரச்சனைகளை உருவாக்குகின்றன, மற்றும் அவைகள் மற்ற வசனங்களுக்கு முன்பாக வருகின்றன, மற்றும் இவைகள் வெளிப்படையாக பொருள் கூறும் வசனங்களாகும். இந்த ஒன்பது வசனங்கள் பல கேள்விகளையும் மற்றும் கருத்து வேறுபாட்டிற்கு இடமான பிரச்சனைகளையும் எழுப்பியுள்ளது. ஏன் இறைவன் தான் ஒரு பிரதிநிதியை பூமியில் உருவாக்கும் திட்டம் பற்றி தேவதூதர்களிடம் சொல்லவேண்டும்? ஆதாமின் முதல் சந்ததி ஒரு தீமையான வேலையை செய்வான் என்று தேவதூதர்களுக்கு எப்படி தெரிந்தது? தேவதூதர்கள் இறைவனின் சித்தம் மற்றும் ஞானம் பற்றி எப்படி கேள்வி கேட்க முடிந்தது? எப்படி இறைவனின் இந்த பிரதிநிதி உருவாக்கப்பட்டான், மற்றும் அவ்வளவு சீக்கிரத்தில் ஏன் அவன் இறைவனின் கட்டளையை மீறி தடை செய்யப்பட்ட பழத்தை சாப்பிட்டான்? அந்த தடைசெய்யப்பட்ட மரம் எப்படிப்பட்ட பழத்தை தந்தது? அந்த சாத்தான் இப்லீஷ்) என்பவர் யார்? எப்படி அவன் அந்த தோட்டத்தில் நுழைந்து, களங்கமில்லாத ஆதாம் மற்றும் அவன் மனைவியை இறைவனின் கட்டளையை மீறச்செய்தான்? ஆதாம் எவ்வளவு காலம் பரதீசில் இருந்தார்? அவரது துணையான ஏவாள் எப்போது உருவானாள், மற்றும் அவர்களது பாவம் மற்றும் அவர்கள் தோட்டத்தை விட்டு வெளியேறிய விவரங்கள் அனைத்தும் மிகவும் சுருக்கமாக குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது. குர்ஆன் பல கோள்விகளுக்கு பதிலே சொல்லாமல் அப்படியே விட்டுள்ளது . உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால், ஏவாளின் பெயரையும் குர்ஆன் சொல்வதில்லை, மற்றும் ஏவாள் எப்படி உருவாக்கப்பட்டாள் என்றும் குர்ஆன் சொல்வதில்லை. இந்த எல்லா கேள்விகளுக்கு பதில்கள் மற்றும் இதர கேள்விகளுக்கு பதில் தேவையானால், குர்ஆனுக்கு உரை எழுதுபவர்கள் "வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் சென்று தெரிந்துக்கொள்ளவேண்டும்"... The Qur'an leaves many other questions UNANSWERED. It does not, for example, MENTION EVE BY NAME, or the manner in which she was created. For the answers to these and other questions, commentators HAD TO RESORT TO THE PEOPLE OF THE BOOK… Ayoub, The Qur'an and Its Interpreters - Volume 1 [State University of New York Press, Albany 1984], p. 73; bold and capital emphasis ours)
ஒருவர் ஆதாம் மற்றும் ஏவாளின் கதைப் பற்றி இஸ்லாமிய அறிஞர்களை அணுகினால், அவர்கள் அனைவரும் பைபிள் சொல்லும் நிகழ்ச்சி விவரங்களை பெரும்பான்மையாக ஏற்றுக் கொள்கின்றனர்:
35) டபரி என்பவர் தன் தஃப்சீருக்காக ஆரம்பகாலத்தில் அதிகாரபூர்வமாக சொன்னவர்கள் வரை சென்று தன் விவரங்களை சேகரித்துள்ளார். நபியின் தோழர்களாகிய இபின் அப்பாஸ் இபின் மசூத் மற்றும் இதர தோழர்களின் அதிகாரபூர்வமாக சொல்லப்பட்ட ஹதீஸாக கீழ்கண்டவாறு கூறுகிறார், "பரதீசில் ஆதாம் தனிமையில் இருந்தார், அவருக்கு துணையாக யாரும் அவருக்கு இல்லாமல் இருந்தது. அவர் தூங்கச்சென்றார் மற்றும் அவர் விழித்து பார்க்கும் போது ஒரு பெண் தன் பக்கத்தில் இருப்பதைக் கண்டார், அந்த பெண்ணை இறைவன் ஆதாமின் விலா எலும்பினால் உருவாக்கியிருந்தார்". ஆதாம், ஏவாளை நோக்கி, "நீ யார்?" என்றார், அதற்கு ஏவாள் "நான் ஒரு பெண்" என்றார். "நீ ஏன் உருவாக்கப்பட்டாய்?" என்று ஆதாம் கேட்டார். "உங்களுக்கு ஒரு துணையாக இருக்கும் படியாக நான் உருவாக்கப்பட்டேன்" என்று ஏவாள் கூறினார் Tabari, I, p. 513). இபின் அப்பாஸ் சொன்னதாக பல ஹதீஸ்கள் உண்டு, அதாவது, 'இறைவன் ஏவாளை ஆதாமின் இடது விலா எலும்பினால் உருவாக்கினார்' என்று இபின் அப்பாஸ் சொன்னார். இந்த விவரம் அவர்களுக்கு வேதத்திற்கு உரியவர்களிடமிருந்து கிடைத்ததாகவும், முக்கியமாக யூதர்களிடமிருந்து கிடைத்ததாக அவர்கள் கூறினார்கள். ஆதாம் பரதீசில் தோட்டத்தில்) வாழ்வதற்கு முன்பாக ஏவாள் உருவாக்கப்பட்டாரா அல்லது அதற்கு பின்பு உருவாக்கபப்ட்டாரா என்று அவர்களுக்குள் பல கருத்துக்கள் உடையவர்களாக இருந்தனர். ஆதாமின் மனைவியின் விவரம் பற்றி டபரி சொல்லும் போது, "தேவதூதர்கள், ஆதாமின் அறிவை சோதித்து அறிய விரும்பினர், அதனால், ஆதாமிடம் தேவதூதர்கள் 'ஓ ஆதாமே, உன் மனைவியின் அவளின்) பெயர் என்ன?' என்றனர். அதற்கு ஆதாம், 'இவள் ஏவாள் ஹவா)' என்றார். அவர்கள் 'ஏன் அவளை ஏவாள் ஹவா) என்று அழைக்கிறாய்?' என்று கேட்டனர், அதற்கு ஆதாம், 'ஏனென்றால், அவள் உயிருள்ளவளாக இருப்பதினால்' என்று பதில் அளித்தார்" Because she was created of a living thing'" Tabari, I, p. 518). Ayoub, p. 82; bold emphasis ours)
ஏவாளுக்கு பெயர் வந்த முறைப் பற்றி ஆதாம் சொன்னதற்கும், இதைப்பற்றி பைபிள் சொன்னதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நாம் கவனிக்கவேண்டும். இந்த இடத்திலே, ஏவாள் என்று ஏன் அவளுக்கு பெயர் வந்தது என்றால், அவள் "உயிருள்ளவள் ஆவாள்" என்பதாக சொல்லப்பட்டுள்ளது.
“ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக் கெல்லாம் தாயானவள்.” ஆதியாகமம் 3:20
"The man called his wife's name Eve, BECAUSE she was the mother of all living." Genesis 3:20
பரிசுத்த பைபிளில் ஏவாளுக்கு கொடுத்த மேன்மை மற்றும் கௌரவம், இஸ்லாமில் ஏவாளுக்கு கொடுத்ததை விட பலமடங்கு அதிகமாகவே உள்ளது என்பதை மிகவும் தெளிவாக புரிந்துக்கொள்ளலாம்.
சுன்னி சரித்திர ஆசிரியரும் மற்றும் உரையாளருமான அல் டபரி இன்னும் சிறிது முன்னுக்குச் சென்று, 'ஏவாளின் பாவத்தின் காரணமாக அல்லா பெண்களை முட்டாள்களாக ஆக்கினார்!" என்றுச் சொல்கிறார்.
யூனுஸ் இபின் வஹப் இபின் ஜைத் என்பவரின் படி
இறைவனின் வார்த்தையின் உரையின்படி: "மற்றும் அவன் மெல்லியதாக பேசினான்"): சாத்தான் அந்த மரத்தைப் பற்றி ஏவாளிடம் மெல்லியதாகச் சொன்னான் மற்றும் ஏவாளை அந்த மரத்தினிடம் கொண்டுவருவதில் வெற்றிப்பெற்றான்; மேலும் ஆதாமுக்கு அம்மரம் நல்லதாக தென்படவைத்தான். அவர் தொடர்ந்தார். ஆதாமுக்கு ஏவாளிடம் ஒரு தேவை ஏற்பட்டப்போது, அவளை அழைத்தான், அவள் சொன்னாள்: நீங்கள் அந்த இடத்தில் போகாதவரையில் என்னால் முடியாது என்றாள். ஆதாம் அந்த இடத்தில் சென்ற போது, அவள் மறுபடியும் அவள்:"இல்லை, நீங்கள் அந்த மரத்தின் கனியை சாப்பிடாதவரையில் என்னால் முடியாது என்றாள்". அவர் தொடர்ந்தார். அவர்கள் இருவரும் அந்த மரத்தின் கனியை புசித்தார்கள், மற்றும் அவர்கள் அந்தரங்க உறுப்புக்கள் பற்றிய உணர்வை பெற்றார்கள் வெட்கமடைந்தார்கள்). அவர் தொடர்ந்தார். ஆதாம், வெகுசீக்கிரமாக பரதீசுக்கு தோட்டத்திற்கு)ச் சென்றார். அவரது இறைவன் அவரை அழைத்தார்: ஆதாமே! நீ என்னைவிட்டா ஓடப்பார்க்கிறாய்? ஆதாம் மறுமொழி அளித்தார்: இல்லை இறைவனே, ஆனால், உங்கள் முன்பாக நிற்பதற்கு நான் வெட்கப்படுகிறேன். இறைவன் ஆதாமை நோக்கி, இப்படி உனக்கு ஆவதற்கு என்ன காரணம் என்று கேட்டபோது, ஆதாம் சொன்னார்: 'ஏவாள் தான் காரணம் என் இறைவனே'. பின்பு இறைவன் சொன்னார்: 'அவள் செய்த செயலுக்காக, இனி அவளுக்கு ஒவ்வொரு மாதமும் உதிரப்போக்கு உண்டாகும்படி செய்வது என் கடமையாகும்'. நான் அவளை அறிவுள்ளவளாக halimah) உருவாக்கியிருந்தாலும், இப்போது அவளை ஒரு முட்டாளாக ஆக்குகிறேன். மற்றும் அவள் கர்ப்பமாவதும், பிள்ளைபெறுவதும் மிகவும் சுலபமாக இருந்தாலும், இனி அவள் கர்ப்பமாகும் போது கஷ்டப்படும்படிச் செய்வேன், பிள்ளை பெறும்போது வேதனை அடையும்படிச் செய்வேன். இபின் ஜையத் கூறினார்: ஏவாளை தாக்கிய இந்த வேதனை தான் உலகத்தில் உள்ள பெண்களையும் தாக்கியது Ibn Zayd said: Were it not for the affliction that affected Eve, the women of this world would not menstruate, AND THEY WOULD BE INTELLIGENT and, when pregnant, give birth easily) .
ஆகையால், மறுபடியும் குர்ஆனை விட பரிசுத்த பைபிள் மிகவும் தெளிவாகவும், மேன்மையாகவும் விவரங்களைச் சொல்கிறது. ஏனென்றால், குர்ஆன் முக்கியமான விவரங்களைச் சொல்ல தவறியது, அதே நேரத்தில் அந்த விவரங்களை பைபிள் விளக்கித்தருகிறது.
ஆங்கில மூலம்: Women in the Bible - Part 2 Some Objections Considered)
இஸ்லாமிலும் கிறிஸ்தவத்திலும் பெண்கள்
சாம் ஷமான் அவர்களின் இதர கட்டுரைகள்
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்