தேவன் தம்மை எவ்விதம் வெளிப்படுத்துகிறார்?
How does God reveal Himself?
இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் ஆபிரஹாமின் விசுவாசத்தை ஒரே மாதிரியாகக் காத்துக் கொள்கிறார்கள். இவ்விரு பிரிவினரும், தங்கள் தீர்க்கதரிசிகள் மூலமாக தங்கள் தேவன்/அல்லா இறக்கிய வெளிப்பாடுகள் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றுச் சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் வெளிப்பாடு என்ற வார்த்தைக்கு என்ன பொருள் கொள்கின்றனர்? மெய்யான ஒரே தெய்வத்தினை வழிபடுதலையே நாடும் நாம் அனைவரும் கடவுள் தான் தம்மை நமக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஒப்புக்கொள்கிறோம். நம்முடைய சொந்த முயற்சியினால் நாம் அவரைக் கண்டுகொள்ள முடியாது, அதனால் தம்மை வெளிப்படுத்த அவரே வேண்டும். கடவுள் தம்மை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்?
குர்ஆன் 42:51-52 "அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ அல்லது திரைக்கப்பால் இருந்தோ அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியின் மீது வஹீயை அறிவிக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி
நேரிடையாகப்) பேசவதில்லை நிச்சயமாக அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன்.
நபியே!) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்; அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை - எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில நாம் விரும்பியோருக்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம் - நிச்சயமாக நீர் மக்களை) நேரான பாதையில் வழி காண்பிக்கின்றீர்."
வெளிப்பாடு குறித்த இஸ்லாமியரின் பார்வை
வெளிப்பாடு குறித்த கிறிஸ்தவரின் பார்வை
இயேசு கிறிஸ்து, தேவனின் வார்த்தை
சரியான ஒப்பிடுதல்
வெளிப்பாடு குறித்த இஸ்லாமியர்களின் பார்வை
The Islamic View of Revelation
மனோரீதியான தூண்டுதலினாலன்றி
சொர்க்கத்தில் இருக்கும் கற்பலகைகளை சூரா 85:21-22) பற்றி கவனிப்போம். குர்ஆன் நிரந்தரமாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கும் இப்பலகைகள், உண்டாக்கப்பட்டவை அல்ல, இவைகள் நிரந்தரமானவைகள். அல்லா, அளவிட முடியாதவரும் அற்புதமானவருமாய் இருப்பதினால், அவருடைய வார்த்தையும் வெளிப்பாடுகளும் அளவிட முடியாதவையும் அற்புதமானவையுமாய் இருக்கின்றன. முகமதுவின் மூலமாகக் கொடுக்கப்பட்ட இந்த இறுதி வெளிப்பாடு தெய்வீகமானது; எனவே மனிதர்களின் மதிப்பீட்டிற்கும் சர்ச்சைக்கும் அப்பாற்பட்டது. இதன் அர்த்தம் என்னவென்றால், இப்பொழுது நம் கையில் இருக்கும் குர்ஆன், இன்றும் என்றும் ஒரு எழுத்தும் மாறக்கூடாதபடி அசலாயும் இறுதியாயும் இருக்கும் என்பதே.
நாம் அல்லாவின் குர்ஆனுக்கு, அதன் வாசகங்களைப் பற்றிக் கேள்வியேதும் கேட்காமல் அடிபணிய வேண்டும். ஒரு அடிமை, தன் எஜமானிடம் கேள்வி கேட்க முடியுமா? முடியாதல்லவா, அதுபோன்றே, ஒரு முஸ்லிம் குர்ஆனைப் பற்றி வினவ முடியாது.
இந்தக் கட்டத்தில், முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களைப் பார்த்து, "உங்களுடைய புத்தகம் எப்படி?" எனக் கேட்கிறார்கள். நாமும் குர்ஆனையும் பைபிளையும் ஒப்பிடுவோம்.
வெளிப்பாடு குறித்த கிறிஸ்தவர்களின் பார்வை
The Christian View of Revelation
துரதிர்ஷ்டவசமாக, இந்த விஷயம், தவறான அடிப்படையில் ஆரம்பிக்கப்படுகிறது. கிறிஸ்தவர்களைப் பொருத்தமட்டில், வெளிப்படுத்துதல் தொடர்பான அவர்களின் கருத்தில் இருந்து பைபிள் மற்றும் குர்ஆனின் ஒப்பீடு சற்றுக் குறைவுபடுகிறது.
கிறிஸ்தவர்கள் புரிந்துகொண்டுள்ளபடி, தேவன் ஒரே ஒரு வழியின் மூலமாக அல்லாமல், பல வழிகளில் பேசியிருக்கிறார்:
1. படைத்தல்
Creation): இயற்கை, இது தெய்வீக வேலைப்பாட்டின் வெளிப்பாடு.
2. கிரியைகள் Action): அதிசயப்படத்தக்க அற்புதங்கள் மூலமாக பல வழிகளில் தேவன் மனித காரியங்களில் நேரடியாக இடைபட்டிருக்கிறார்.
3. தீர்க்கதரிசிகள் Prophets): அவர்களுக்கு அருளப்பட்ட வார்த்தைகள் மூலமாக.
நாம் இந்த வெளிப்படுகளைப் பெற்றிருக்கிறோம். ஆனால், ஏதேன் தோட்டத்தில் ஆதாமின் கீழ்படியாமையினால் நாம் பாவிகளானோம். இது நம் மனதினைக் குருடாகி, தேவனை நாம் காணக்கூடாதபடி செய்தது 2 கொரிந்தியர் 4:4). இவ்விதமாய், மனுக்குலம் முழுவதும் தொடர்ந்து தேவனைப் புரிந்துகொள்ளத் தவறியது. இந்தப் பாவத்தினாலே விக்கிரக ஆராதனை ஆரம்பித்தது. மெய்யான ஒரே தேவனைப் பற்றிய அறிவினை நாம் ஒருபோதும் பற்றிக் கொள்ளவில்லை.
இதன் காரணமாக, தேவன் இறுதியான வழியினைத் தெரிந்துகொண்டார். அவர் நம்மில் ஒருவராகி, தமக்காகத் தாமே பேசினார். அவர் தேவனாய் இருப்பதினால், அவரே அவரை நமக்கு வெளிப்படுத்த முடியும். தேவன் ஒருவரே தேவனுக்காய்ப் பேச முடியும். தேவன் யார் என்று நீங்கள் எனக்குச் சொல்ல முயன்றால் நீங்கள் தோற்றுப் போவீர்கள். நானும் ஒன்றும் பெரிதாய்ச் சொல்லிவிட முடியாது, ஏனெனில், பாவியான ஒரு சாதாரண மனிதனால் தேவன் உண்மையில் எப்படிப்பட்டவர் என்பதில் திரித்தே தான் கூற முடியும். அவரைப் பற்றி அவரே தான் வெளிப்படுத்த வேண்டும்; ஏனெனில் இடையிலுள்ள அனைவரும் அவர் போன்ற அளவிட முடியாத பரிசுத்த ஞானத்தில் மிகவும் குறைவு பட்டவர்களே. எனவே அவர் பேசிய நான்காவது வழி இதுவே:
4. தேவனின் அப்பழுக்கற்ற பரிபூரணமான வார்த்தையாகிய இயேசு தேவன் யார் என்பதை நமக்குக் காண்பித்தார்.
இயேசு கிறிஸ்து, தேவனின் வார்த்தை
Jesus Christ, the Word of God
தாம் யார் என்பதை மனிதருக்கு வெளிப்படுத்தியதில் இயேசு கிறிஸ்து தேவனுக்குக் கீழானவர் அல்ல, அவர் தேவனுக்கு சமமானவர். அனைவரையும் ஒதுக்கிவிட்டு தேவனே தமக்காகப் பேசுகிறார். நிச்சயமாக, கிறிஸ்துவில் மட்டுமே அவர் அறியப்படுகிறார்.
இயேசுவே இதனை அறிவித்தார். இயேசுவின் சீடராகிய அப்போஸ்தலர் பிலிப்பு ஒருமுறை தேவனை அறிய விரும்பினார். அதற்கு இயேசு,
பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?
நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்." என்றார் யோவான் 14:9-10)
இப்போது நாம் இயேசுவின் வெளிப்பாடினை கடவுளின் ஏனைய வெளிப்பாடுகளுடன் ஒப்பிடுவோம்.
1. படைப்பு தேவனின் மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆனால் விக்கிரக ஆராதனைக்காரர்களும், இதர தெய்வங்களை வணங்குகிறவர்களும்
Pagans) கூட இதைச் சொல்கிறார்கள்! இவர்கள், "தேவன்/இறைவன் யார்" என்று அறிந்துகொண்டார்கள் என நாம் கூற முடியுமா? இல்லை, தேவனைப் பற்றி அறிந்துகொள்ள வெறும் இயற்கையை விட அதனினும் மேலானவையும் தேவை No, they need more than just nature to tell them what God is like).
2. அற்புதங்கள், ஒரு தீர்க்கதரிசி தேவனிடமிருந்து வந்தவர் என்பதை உறுதி செய்கிறது. ஆனால், கள்ளத் தீர்க்கதரிசனம் உரைப்பவர்களைப் பாருங்கள், அவர்கள் அனேகம் தேவர்கள் உள்ளார்களென்றும், சில வேளைகளில் தாங்களே தேவர்களென்றும் அறிக்கை செய்கின்றனர்! இந்துக்கள் மற்றும் புத்த மதத்தினரின் தீர்க்கதரிசிகள், அற்புதங்கள் செய்து, நம்பாதவர்களைக் கூட ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றனர். ஆனால், இத்தகைய அதிசயங்கள் தேவனைப் புரிந்துகொள்ளப் போதுமானவையா? இல்லை, நமக்கு அற்புதங்களைக் காட்டிலும் அதிகம் தேவை.
3. பைபிள், தீர்க்கத்தரிசிகளின் மற்றும் தூதர்களின் செய்திகளின் தொகுப்பாகும். அது எள்ளளவும் தவறே இல்லாத, தவறவே முடியாத தேவனின் வார்த்தையாகும். இயேசு கிறிஸ்துவில் தேவனின் வெளிப்பாடு அது. முழு பைபிளும் தேவனைப் பற்றிப் பேசுவதாகவே இயேசு போதித்தார். "வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; ... என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே" யோவான் 5:39), பைபிள் நமது புரிந்து கொள்ளுதலின் முடிவல்ல. அது ஒரு ஆரம்ப இடமே, அதாவது, அது இயேசு கிறிஸ்துவை நோக்கிச் சுட்டிக்காட்டும் ஓர் கைகாட்டி. எனினும், நம்முடைய மனித மூளையினால், மிகவும் பக்தியோடும், அதிக அக்கரையோடும் நாம் என்ன தான் ஆராய்ச்சி செய்தாலும், தேவனைப் பற்றி முழுவதுமாக நாம் அறிந்துக் கொள்ளமுடியாது Yet our human minds cannot discover God by any investigation of a book, no matter how devout, serious or religiously committed that investigation is). எனவே, தேவ ஆவியின் ruh-allah) மூலம் இயேசு கிறிஸ்துவை பைபிளின் வார்த்தைகளில் நாம் கண்டுபிடிக்கிறோம்.
இது இஸ்லாமியருக்குக் குழப்பமாகத் தோன்றலாம்; அல்லது பயமுறுத்துவது போன்றும் இருக்கலாம். இவ்வுண்மையை அவர்களுக்கு விளக்க, நமக்கு ஒரு வித்தியாசமான கோணம் தேவைப் படுகிறது. பலர் ஆராய முனைவது போல குர்ஆனை பைபிளுடன் ஒப்பிடாமல், அதனை இயேசுவுடனாக ஒப்பிடுவது அதிக பலனுள்ளதாய் இருக்கும். ஏனெனில் இரண்டும் கடவுளின் வார்த்தை என்பது மட்டுமல்லாமல் மனிதர்களுக்குக் கடவுளின் உண்மையான வெளிப்பாடாகவும் நிலை நிற்கின்றன.
சரியான ஒப்பிடுதல்
Better Comparisons
காலங்காலமாக, பல இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும், முஹம்மதுவை இயேசுவோடும், மற்றும் குர்ஆனை பைபிளோடும் ஒப்பிட்டு வந்துள்ளனர்.
கீழேயுள்ள பட்டியலைப் பார்க்கவும்)முந்தய ஒப்பீடுகள் | ஏனெனில் இவை இரண்டும் இவர்கள் இருவரும்) |
குர்ஆன்-பைபிள் ஒப்பீடு | ...புத்தகங்கள் |
முஹம்மது-இயேசு ஒப்பீடு | ...மனிதர்கள் |
OLD COMPARISONS | Because both are... |
Qur'an compared to Bible | ...books |
Muhammad compared to Jesus | ...men |
இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் சிறப்பான முறையில், ஒருசில விவாதங்களையே நடத்தியுள்ளனர் என்பதில் ஆச்சரியம் இல்லை! இஸ்லாமின் மற்றும் கிறிஸ்துவத்தின் பொதுவான தன்மைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது அவைகளை நன்முறையில் விளங்கிப் புரிந்து கொள்ள ஏதுவாகும். ஒப்பிடுவதற்கேதுவான இத்தன்மைகளின் பிரிவுகள்
1) குர்ஆனும், இயேசுவும், 2) முஹம்மதுவும், இயேசுவின் அப்போஸ்தலரும், மற்றும் 3) பைபிளும், ஹதீஸ்கள்/தரிக்ஹ், சீராக்கள் மற்றும் உரைகள் இவைகளும் ஆகும், பட்டியலைப் பார்க்கவும்).முன்னிலும் சிறந்த ஒப்பீடு | ஏனெனில் இவை இரண்டும் இவ்வாறாகக் கருதப்படுகின்றன ... |
குர்ஆனும், இயேசுவும் | ...கடவுளின் நித்திய வெளிப்பாடு |
முஹம்மதுவும், இயேசுவின் அப்போஸ்தலரும் | ...வெளிப்பாட்டின் செய்தியினை அறிவித்தவர்கள் |
பைபிளும், ஹதீஸ்கள்/தரிக்ஹ், சீராக்கள் மற்றும் உரைகள் ஆகிய இவைகளும் | ...வெளிப்பாட்டின் வரலாறும் போதனைகளும் செய்திகளும் |
ஆங்கிலத்தில்
BETTER COMPARISONS | Because both are regarded as... |
Qur'an compared to Jesus | ...the eternal revelation of God |
Muhammad compared to Jesus' Apostles | ...messengers of the revelation |
Hadith, Tarikh, Sira and Tafsir compared to the Bible | ...the history and teachings of the revelation and messengers |
இது ஒருவரையொருவர் புரிந்துகொள்ள உதவியாயிருக்கும் என்ற அதே வேளையில், நாம் ஒன்றினைக் கவனமாக மனதிற் கொள்ள வேண்டும். அதாவது, புதிய ஏற்பாடு இயேசுவைப் பற்றியே பிரதானமாகப் பேசினாலும், அவருடைய வாழ்க்கை நடைமுறைகளைப் பற்றி அதில் அதிகம் சொல்லப்படவில்லை. மாறாக, ஹதீஸ்களும் சூராவும், முகமதுவின் வாழ்க்கை முறைகளை அவர் என்ன செய்தார் என்பன போன்றவற்றை அவர் கூறியவற்றின் விளக்கங்களுடன் விவரமாகச் சொல்கின்றன.
கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியருக்குள்ளான இறைவனின் வெளிப்பாடு தொடர்பான ஒரு விவாதத்தில் நாம் ஈடுபடுவோமேயானால், அதில் இயேசு கிறிஸ்துவையும் குர்ஆனையும் மட்டுமே ஒப்பிடுதல் வேண்டும், பைபிளையும் குர்ஆனையும் அல்ல. அதாவது, நாம் பைபிளை அல்ல, மாறாக இயேசு கிறிஸ்துவையே நிச்சயமான தேவனின் வெளிப்பாடாகக் கொள்ள வேண்டும். இயேசு தான் தேவனின் இறுதி வார்த்தை. தேவனின் ஆவி மூலமும் பைபிளின் எழுதப்பட்ட வார்த்தையின் மூலமாகவும் நம் தனிப்பட்ட அனுபவத்தின் மூலமாகவும் இன்றும் நாம் காணக்கூடியவர் அவரே.
இக்காரணத்தினாலேயே, நாம் பைபிளை, தேவனால் அருளப்பட்ட பிழையற்ற தேவ வார்த்தை எனவும், இயேசுவின் பிறப்பு, வாழ்க்கை மற்றும் உயிர்த்தெழுதலின் சரித்திரம் முழுவதிலும் அது செயலாற்றுகிறது எனவும் மதிக்கிறோம். விசுவாசத்தின் மூலம் நாம் அவரை அணுகும்போது தேவனை அவர் நமக்கு வெளிப்படுத்துவார். தேவன், மனிதர்களின் வார்த்தைகட்கு மிகவும் அப்பாற்பட்டவர். அவரின் வார்த்தையினாலன்றி எதினாலும் அவரை வெளிப்படுத்த முடியாது.
தேவ ஆவியானவர் தாமே தேவனைத் தேடுபவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்த இயேசு கிறிஸ்துவிடமே அழைத்துச் செல்கிறார். வெறும் மனிதர்களின் வார்த்தைகளில் மட்டுமே போலியான கடவுளின் வெளிப்பாட்டைக் கண்டு திருப்தி அடைவோர் வீண் நம்பிக்கையை வளர்க்கட்டும், தடையில்லை, ஆனால் தாமே சுயமாக வெளிப்படுத்தும் தேவனைச் சந்திப்பதைத் தவிர நாம் வேறெதிலும் திருப்தியடைய மாட்டோம்.
இப்புதிய ஒப்பிடுதலின்படி, இயேசு மற்றும் குர்ஆன் இரண்டிற்கும் எந்த விதப் பொருத்தமும் இல்லை. குர்ஆன் என்பது ஒரு சாதாரணப் புத்தகம் தான். அதன் ஆதாரம் ஒரு அநித்தியமான பாவமுள்ள மனிதனின் தோளின் மீது சுமத்தப்பட்டுள்ளது சூரா 80:1-3). இது இஸ்லாமியராலும் கிறிஸ்தவராலும் ஒரு மனதாய்ப் பாவமற்றவர் எனக் கருதப்படும் இயேசுவுக்கு எவ்வகையிலும் நிகராகாது. அவரின் வார்த்தையின் படியே அவர் தேவன் தான் என்பது பூரணமான வெளிப்பாடு.
In light of these new comparisons, there is no match between the two revelations, Jesus and the Qur'an. The Qur'an is merely a book whose authenticity rests solely on the shoulders of one finite and sinful man Sura 80:1-3). It is no match against Jesus, revered by Muslims and Christians alike as sinless, who, according to His word, is God Himself, the perfect revelation.
"பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம் பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக் கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்."
எபிரெயர் 1:1-2)
ஆங்கில மூலம்: How does God reveal Himself?
This pamphlet was compiled by an interdenominational group of evangelical Christians concerned with Muslim-Christian dialogue.
பைபிள் பற்றிய கட்டுரைகள்
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்