சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு

பின் இணைப்பு A - பாகம் 4


Appendix A4: Samarqand MSS VS 1924 Egyptian Edition

பக்கம் #622:

- எட்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 36:18ம் வசனத்தில் "மீம்" எழுத்து காணப்படவில்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் அது உள்ளது.

- பத்தாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 36:23ம் வசனத்தில் "அலீஃப்" உள்ளது, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் அவ்வெழுத்து காணப்பாவில்லை.

பக்கம் #684:

- பதினோராம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 40:81ம் வசனத்தில் காம்பு போன்ற உறுப்பு காணப்படவில்லை, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் "" என்ற எழுத்து காணப்படுகிறது.

பக்கம் #652:

- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 37:103ம் வசனத்தில் முதலில் "வாவ்" என்ற எழுத்தும் அதைத் தொடர்ந்து "மீம்-அலீஃப்" என்ற எழுத்துக்களும் வருகின்றன. ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆன்களில் "ஃப-லாம்-மீம்-அலீஃப்" என்ற வரிசையில் எழுத்துக்கள் வருகின்றன (முழுவசனத்தையும் பார்க்க 67ம் பக்கத்தைப் பார்க்கவும்).

- நான்காம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 37:105ம் வசனத்தில் "ஸாத்" என்ற எழுத்து இல்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் அது இடம் பெற்றுள்ளது. 'மூல' குர்‍ஆனில் "அலீஃப்" காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்‍ஆனில் "ட (ta)" காணப்படுகிறது.

- ஆறாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் அதே வசனத்தில் "நூன்" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால குர்‍ஆனில் "நூன்" எழுத்து காணப்படுகிறது.

- ஏழாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 37:106ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் இவ்வெழுத்து காணப்படுகிறது.

- எட்டாம் வரியில் அதே வசனத்தில் 'மூல' குர்‍ஆனில் "ப (ba)" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் இவ்வெழுத்து காணப்படுகிறது.


xix


சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு

பின் இணைப்பு A - பாகம் 4

பக்கம் #665:

- எட்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 38:12ம் வசனத்தில் அனேக சிறிய எழுத்துக்கள் காணப்படுகின்றன. 'மூல' குர்‍ஆனில் ஏற்கனவே அந்த இடத்தில் இருந்த "'மூல' (பெரிய) எழுத்துக்களை" நீக்கிவிட்டு, இந்த சிறிய எழுத்துக்களை அவ்விடத்தில் நுழைத்துள்ளார்கள். இந்த சிறிய எழுத்துக்கள் தற்கால குர்‍ஆனிலும் காணப்படுகிறது.

- பத்தாம் வரியில் அதே வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், அது தற்கால குர்‍ஆனில் காணப்படவில்லை.

பக்கம் #669:

- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 38:22ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆனில் அந்த இடத்தில் "" என்ற எழுத்து காணப்படுகிரது.

- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 38:23ம் வசனத்தில் "நூன்" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் 'நூன்" காணப்படுகிறது.

பக்கம் #671:

- எட்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 38:26ம் வசனத்தில் "" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் "" காணப்படுகிறது.

xx


சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு

பின் இணைப்பு A - பாகம் 4

பக்கம் #673: 

- நான்காம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 39:6ம் வசனத்தில் ஒரு காம்பு போன்ற உறுப்பும் ஒரு "லாம்" என்ற எழுத்தும் காணப்படுகிறது, ஆனால், தற்கால அரபிக் கு‍ர்‍ஆனில் இரண்டு காம்பு போன்ற உறுக்கள் காணப்படுகிறது, அவ்விடத்தில் ஒரு "" என்ற எழுத்தும், மற்றும் ஒரு "நூன்" என்ற எழுத்தும் காணப்படுகிறது.

- அதே வரியில், 'மூல' குர்‍ஆனில் ஒரு காம்பு காணப்படுகிறது, அதோடு கூட "ஜீம்" காணப்படுகிறது, இந்த "ஜீம்" என்ற எழுத்தானது நீண்டுக்கொண்டு சென்றுள்ளது, இவ்வெழுத்து பொதுவாக ஒரு வால் போல மாறி திரும்ப பின்னோக்கி வரவேண்டும், இது நமக்கு எதைக் காட்டுகிறது என்றால், இந்த ஜீம் என்ற எழுத்துக்கு பிறகு வேறு எழுத்து(க்கள்) இருப்பதாக தெரிகிறது. தற்கால அரபிக் குர்‍ஆனில் இந்த ஜீம் என்ற எழுத்து ஒன்று மட்டுமே காணப்படுகிறது.

- பதினோராம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 39:7ம் வசனத்தில் "இரண்டு காம்புகள்" இல்லாமல் காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்‍ஆன்களில் "நூன் மற்றும் ட (ta)" காணப்படுகிறது.

பக்கம் #696:

- பத்தாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 41:31ம் வசனம் தற்கால அரபிக் குர்‍ஆனில் உள்ள வசனத்தை விட வித்தியாசமாக காணப்படுகிறது.

xxi


ஆங்கில மூலம்: Appendix A4: Samarqand MSS VS 1924 Egyptian Edition

சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு - இதர பாகங்கள்

பின் இணைப்பு A - பாகம் 1, பாகம் 2 & பாகம் 3
.